கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பொருளாதாரம்… தற்கொலை செய்துகொண்ட நிதியமைச்சர் !

திங்கள், 30 மார்ச் 2020 (08:04 IST)
கொரோனா பாதிப்பால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மன உளைச்சலில் இருந்த ஜெர்மன் நிதியமைச்சர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு கடுமையான பொருளாதார சீரழிவுகளை ஏற்படுத்தியுள்ளது. இதில் முக்கியமான ஒரு நாடாக ஜெர்மனியும் இருக்கிறது. அந்நாட்டின் நிதியமைச்சரான தாமஸ் ஸ்கேஃபர் இதனால் தற்கொலை செய்துகொண்ட செய்தி உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அவரது சடலம் ப்ராங்பட் நகரின் ரயில்வே தண்டவாளத்துக்கு அருகில் கண்டெடுக்கப்பட்டுள்ளதை அந்நாட்டு அரசு உறுதிப் படுத்தியுள்ளது. தாமஸ் பொருளாதார சீரழிவை சரிசெய்ய பலவிதங்களில் முயன்றதாகவும், இது சம்மந்தமாக அவர் மன உளைச்சலில் இருந்ததாகவும், ஆனால் அவரது முடிவு நம்ப முடியாததாக இருப்பதாகவும் சக அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்