டிக்டாக் பிரபலங்களுக்கு பணம் கொடுக்கும் ஃபேஸ்புக்: புதிய தகவல்

புதன், 29 ஜூலை 2020 (21:06 IST)
இந்தியா அமெரிக்கா உட்பட ஒரு சில நாடுகளில் டிக் டாக் செயலி தடை செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது பேஸ்புக் ’ரீல்ஸ்’ என்ற புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது
 
இந்த செயலியில் மில்லியன்கணக்கான ஃபாலோயர்கள் வைத்துள்ளவர்கள் சுவாரஸ்யமான வீடியோ பதிவு செய்தால் அவர்களுடைய ஃபாலோயர்களுக்கு ஏற்ப பணம் அளிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது 
 
புதிய படைப்பாளிகளை உருவாக்கும் நோக்கத்தில் இந்த பணம் கொடுக்கப்படும் என்றும் சுவராசியமான வீடியோக்களை வெளியிட்டால், அந்த வீடியோவுக்கு கிடைக்கும் வரவேற்புக்கு ஏற்ற வகையில் வருமானம் கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது 
 
டிக்டாக்கில் பிரபலமாக இருந்த பலர் இந்த வாய்ப்பை பயன்படுத்த ரீல்ஸ் செயலில் தங்களுடைய  வீடியோக்களை பதிவு செய்து வருவதாக கூறப்படுகிறது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்