அதிகரிக்கும் கொரோனா பாதிப்புகள்; நிரம்பும் மருத்துவமனைகள்! – இங்கிலாந்தில் 4 அடுக்கு ஊரடங்கு!

வியாழன், 31 டிசம்பர் 2020 (12:34 IST)
இங்கிலாந்தில் வீரியமான புதிய கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதால் 4 அடுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கடந்த ஒரு ஆண்டு காலமாக பரவி வாட்டி வதைத்த கொரோனாவிற்கு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் வீரியமுள்ள புதிய கொரோனா பரவ தொடங்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்திலிருந்து பரவ தொடங்கியுள்ள இந்த புதிய கொரோனா முந்தையதை விட 70% வேகமாக பரவ கூடியது என கூறப்படுகிறது.

இந்த புதிய கொரோனாவின் தாக்கம் ஏற்கனவே ஆஸ்திரேலியா, இத்தாலி, இந்தியா, பிரான்ஸ் என பல நாடுகளிலும் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் புதிய கொரோனா பரவலை தடுக்க உலக நாடுகள் வேகமாக தயாராகி வருகின்றன. இந்நிலையில் இங்கிலாந்தில் கொரோனா தாக்கம் வேகமாக அதிகரித்து வருவதால் மருத்துவமனைகள் வேகமாக நிரம்பி வருவதாகவும், மருத்துவர்கள் போதாமையால் பலருக்கு மருத்துவம் பார்ப்பதில் முன்னுரிமை அளிப்பதில் பிரச்சினை எழுந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் புதிய கொரோனா பரவல் கண்டறியப்பட்ட இங்கிலாந்தின் அனைத்து பகுதிகளில் 4 அடுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் இந்த நிலை மற்ற உலக நாடுகளுக்கும் கிலியை ஏற்படுத்தி வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்