”திமிங்கலத்திடம் பேசுவேன்”:உலறிவைத்த ட்ரம்ப்

வெள்ளி, 14 ஜூன் 2019 (16:05 IST)
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், Wales (வேல்ஸ்) நாட்டின் இளவரசரிடம் பேசினேன் என்பதற்கு பதிலாக Whales (திமிங்கலம்) நாட்டின் இளவரசரிடம் பேசினேன் என கூறியதை, சமூக வலைத்தளங்களில் கேலி செய்து வருகின்றனர்.

மற்ற நாடுகளின் மீதான அமெரிக்காவின் உறவுகளை குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் சமீபத்தில் ஒரு பதிவை பகிர்ந்தார், அந்நாட்டின் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்.

அந்த ட்விட்டர் பதிவில் பல வெளிநாட்டு அரசுகளுடன் தினமும் உரையாடுவேன் என்றும், சமீபத்தில் உரையாடிய வெளிநாட்டு அரசுகளின் பெயர்களையும் குறிப்பிட்டுள்ளார்.

அந்த பெயர்களில் “the Prince of Wales” (வேல்ஸ் நாட்டின் இளவரசர்) என்பதற்கு பதிலாக “the prince of Whales” (திமிங்கலங்களின் இளவரசர்) என்று தவறாக குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் தற்போது டொனல்டு ட்ரம்ப்பின் இந்த தவறான கருத்தை கேலி செய்யும் வகையில், திமிங்கலங்களை வைத்து பல மீம்கள் சமூக வலைத்தலங்களில் வலம் வருகின்றன.

இதன் உச்சகட்டமாக வேல்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒரு ஆன்லைன் செய்தி நிறுவனமான “Wales Online”, தனது நிறுவனத்தின் பெயரை “whales online” என்று மாற்றி, அமெரிக்க அதிபர் ட்ரம்பின் ட்விட்டர் பதிவை கேலி செய்துள்ளது.

மேலும் ட்ரம்பின் பதிவு வேல்ஸ் நாட்டை தாண்டி மற்ற நாடுகளை சேர்ந்த மக்களாலும் கேலி செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்