கரன்சி மூலம் பரவும் கொரொனோ வைரஸ்... சீன வங்கிகள் நடவடிக்கை !

சனி, 15 பிப்ரவரி 2020 (17:07 IST)
கரன்சி மூலம் பரவும் கொரொனோ வைரஸ் சீன வங்கிகள் நடவடிக்கை

சீனா நாட்டில் உள்ள வூஹான் என்ற இடத்தில் தான்  கொரோனோ வைரஸ் பரவியது. இதையடுத்து அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள் குழுவாக மக்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுவரை 66 ஆயிரத்துக்கும் அதிகமானோரை தாக்கியுள்ள கொரோனா வைரஸை கட்டுப்படுத்த உலக சுகாதார அமைப்பும் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.
 
இந்நிலையில், கரன்சி மூலம் வைரஸ் பரவலை தடுக்க எடுத்து வருவதாக மத்திய வங்கி அதிகாரிகள் கூறியுள்ளனர்.
 
மக்கள் பயன்படுத்திய கரன்சிகள் மீது புற ஊதா ஒளி, அல்லது அதிக  வெப்பநிலையை பயன்படுத்தி யுவான் நோட்டுகளில் உள்ள கிருமிகளை நீக்கிய பின் தான் அவை தனிப்பெட்டிகளில்  சீல் வைத்து 7 முதல் 14 நாட்கள் வரை தனியாக வைக்கப்பட்டு வருவதாக கூறியுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்