Coronavirus Strain: அதி வேகமாக பரவும் புது வைரஸ்!!

செவ்வாய், 22 டிசம்பர் 2020 (12:22 IST)
புதிய வகை கொரோனா வைரஸ் பரவ தொடங்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸிற்கு கிட்டத்தட்ட மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் இங்கிலாந்தியில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவ தொடங்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
இதனால் லண்டனில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் நிறுத்தப்பட்டு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வைரஸ் குற்த்து நீங்கள் தெரிந்துக்கொள்ள வேண்டிய சிலவற்றை தெரிந்துக்கொள்ளுங்கள்.... 
 
புது கொரோனா வைரஸ் முன்பு இருந்த வைரஸ் வகையை விடவும் 70% வேகமாக பரவக்கூடியது என நம்பப்படுகிறது. 
 
2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதமே இந்த வைரஸ்  கண்டுபிடிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. 
 
டிசம்பர் மாதத்தில் 60% தொற்று, இந்த வகை வைரஸால் ஏற்பட்டிருக்க கூடும். 
 
லண்டன் மற்றும் தென் கிழக்கு இங்கிலாந்து பகுதிகளில் இவ்வகை தொற்று அதிகமாக காணப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்