மாதக்கணக்கில் கோமாவில் இருந்தவர் திடீரென எழுந்த அதிசயம்

புதன், 4 டிசம்பர் 2019 (22:21 IST)
வடக்கு அர்ஜென்டினா நாட்டைச் சேர்ந்த மரியா என்ற 36 வயது பெண்ணுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இவர் ஒருநாள் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது திடீரென மூவர் அவரை தாக்கியதால் அவர் ரத்த வெள்ளத்தில் மிதந்து கோமா நிலைக்கு தள்ளப்பட்டார். மருத்துவர்கள் தீவிரமாக அவருக்கு சிகிச்சை செய்தும் அவருக்கு நினைவு திரும்பவில்லை 
 
இதனையடுத்து அவருக்கு நினைவு திரும்புவது கடினம் என்றும் அதனால் அவரது உடல் உறுப்புகளை தானம் செய்து விடுங்கள் என்றும் அவரது கணவருக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தினர். ஆனால் மரியாவின் கணவர் தனது மனைவி எப்படி மீண்டு வருவார் என்றும் அதனால் உடல் உறுப்புகளை தானம் செய்ய தான் விரும்பவில்லை என்றும் தெரிவித்தார் 
 
இந்த நிலையில் ஒரு சமீபத்தில் ஒருநாள் மரியாவின் கணவர் தனது இரண்டு வயது குழந்தையை அழைத்து கொண்டு மரியாவை பார்க்க மருத்துவமனைக்கு சென்றார். அப்போது மருத்துவமனையில் தனது தாயாரை பார்த்த அந்த குழந்தை, அம்மா எனக்கு பசிக்குது பால் கொடுங்கள் என்று அழுதார். மகளின் குரலை கேட்டதும் மாதக்கணக்கில் கோமாவில் இருந்த மரியா திடீரென கண் விழித்து எழுந்து மகளை கட்டி அணைத்து அவருக்கு பால் கொடுத்தார் 
 
இந்த அதிசயத்தைப் பார்த்த மருத்துவர்களும் மரியாவின் கணவரும் இன்ப அதிர்ச்சியில் மூழ்கினர். ஆனால் அதன் பின் ஏற்பட்ட சோகம் தான் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மரியா தனது குழந்தைக்கு பால் கொடுத்து முடித்ததும் திரும்பவும் கோமா நிலைக்கு தள்ளப்பட்டார்
 
இருப்பினும் மரியாவின் கணவருக்கும் மருத்துவர்களுக்கும் ஒரு நம்பிக்கை வந்துள்ளது. அவ்வப்போது மகளின் குரலைக் கேட்டால் கண்டிப்பாக மரியா கண் விழித்து பார்த்து, ஒரு கட்டத்தில் முழுவதுமாக குணமாகிவிடுவார் என்று நம்பிக்கை கொண்டுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்