கொரோனாவெல்லாம் போச்சு! ஜாலி டூர் கிளம்பிய சீனர்கள்!

சனி, 2 மே 2020 (12:34 IST)
சீனாவில் கொரோனா கட்டுக்குள் வந்துள்ளதை தொடர்ந்து சுற்றுலா செல்வோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சீனாவிலிருந்து பரவ தொடங்கிய கொரோனா தொற்று வேகமாக உலகம் முழுவதும் பரவி பல லட்சம் உயிர்களை பலி வாங்கியுள்ளது. உலக நாடுகள் பல கொரோனா நடவடிக்கையாக ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. இந்நிலையில் தற்போது சீனாவில் இயல்பு நிலை மெல்ல திரும்பி வருகிறது.

நேற்று உலக தொழிலாளர்கள் தினத்தையொட்டி சீனாவில் 5 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதை கொண்டாடும் விதமாக சீன மக்கள் பலர் சுற்றுலா தளங்களுக்கு செல்ல தொடங்கியுள்ளனர். சீனாவில் கொரோனா கட்டுக்குள் வந்ததை தொடர்ந்து 70 சதவீத சுற்றுலா தளங்களும் திறக்கப்பட்டுள்ளன. எனினும் முன்னெச்சரிக்கை சோதனை நடவடிக்கைகள் தொடர்வதாகவும், மாஸ்க் அணிவது அவசியமாக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்