உபெர் தானியங்கி கால் டாக்ஸி மோதி சைக்கிளில் சென்ற பெண் பலி

செவ்வாய், 20 மார்ச் 2018 (09:56 IST)
அமெரிக்காவில் சைக்கிளில் சென்ற பெண் மீது உபெர் நிறுவனத்தின் தானியங்கி கார் மோதியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கால் டாக்ஸி நிறுவனமான உபெர் அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டது. உலகின் பல்வேறு நிடங்களில் உபெருக்கு கிளைகள் உள்ளது. மொபைல் மூலம் புக் செய்தால் இருந்த இடத்திற்கே வரும் உபெர் கால் டாக்ஸி.
 
உபெர் நிறுவனத்தின் சார்பில் தானியங்கி கார்களும் பல்வேறு நாடுகளில் இயக்கப்பட்டு வருகின்றன. சான் பிரான்சிஸ்கோவின் அரிசோனா பகுதியில் உபெர் நிறுவனத்தின் தானியங்கி கார் மோதி சைக்கிளில் சென்ற பெண் ஒருவர் உயிரிழந்தார்.
 
இதையடுத்து உபெர் நிறுவனத்தின் தானியங்கி கார் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. இச்சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்