பிரச்சாரத்தில் ஈடுபட்ட வேட்பாளருக்கு கத்திக்குத்து

வெள்ளி, 7 செப்டம்பர் 2018 (12:16 IST)
பிரேசிலில் நடைபெற இருக்கும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் பொதுமக்களிடையே பேசிக்கொண்டிருக்கும் போது மர்ம நபர்கள் அவரை கத்தியால் குத்தினர்.
பிரேசிலில் அடுத்த மாதம் நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் சோசியல் லிபரல் கட்சி சார்பில் முன்னாள் ராணுவ தளபதி ஜெர் போல் சோனரோ (63) போட்டியிடுகிறார். இவருக்கு மக்களிடையே அதிக செல்வாக்கு இருக்கிறது.
 
இந்நிலையில் அவர் நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். நூற்றுக்கணக்கான மக்களுக்கு நடுவே அவர் உணர்ச்சி பொங்க பேசிக்கொண்டிருந்தார். பலர் அவரை புகைப்படம் பிடித்துக் கொண்டிருந்தனர்.
 
அப்போது கூட்டத்தில் இருந்த மர்ம நபர் ஒருவர், ஜெர் போல் சோனரோவை கத்தியால் வயிற்றுப்பகுதியில் குத்தினான். இதனால் நிலைகுலைந்துபோன அவர், மயக்கம்போட்டு விழுந்தார். உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
 
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் சந்தேகத்தின் பேரில் ஒருவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்