58 சதவீத பெண்களுக்கு தொல்லைகள்… சமூகவலைதளங்களில் நடக்கும் குற்றங்கள்!

வியாழன், 8 அக்டோபர் 2020 (10:29 IST)
உலகெங்கும் சமூகவலைதளங்களில் இயங்கும் பெண்களில் 58 சதவீதம் பேர் தொல்லைகளுக்கு ஆளாவதாக ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.

பிளான் இன்டர்நேஷனல் என்ற அரசு சாரா அமைப்பு சர்வதேச பெண் குழந்தை 2020 என்ற ஆய்வை நடத்தியது. இதில் சமூகவலைதளங்களில் இயங்கும் பெண்களில் பாதிக்கும் மேற்பட்டோர் தாங்கள் தொல்லைகளுக்கு ஆளாகியிருப்பதாகக் கூறியுள்ளனர்.

இந்தியா உள்ளிட்ட 22 நாடுகளில் 15 முதல் 25 வயதுடைய 14,000 பெண்கள் மற்றும் இளம் பெண்கள் இந்த ஆய்வில் வாக்களித்தனர். இதில் அதிகமான பேஸ்புக்கில் 39 சதவீதப் பெண்கள் துன்புறுத்தப்படுவதாகவும், அதற்கடுத்த இடங்களில் இன்ஸ்டாகிராம் (23 சதவீதம்), வாட்ஸ்அப் (14 சதவீதம்), ஸ்னாப்சாட் (10 சதவீதம்), ட்விட்டர் (9 சதவீதம்) மற்றும் டிக்டாக் (6 சதவீதம்)  எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்