உலக சினிமா- கேட் அவுட்

சனி, 26 மே 2018 (19:03 IST)
கடந்த 2017ம் ஆண்டு புதுமுக இயக்குனர் ஜெர்மி ரெனர் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் கேட் அவுட். இப்படம் வெளியாகி மிகப்பெரிய வசூல் சாதனையை செய்தது மட்டுமல்லாமல் நிறைய விருதுகளை வாங்கி குவித்தது.
இந்த திரைப்படத்தின் ஹிரோ டேனியல் கலூயா, கிறிஸ் என்ற கருப்பின இளைஞராக நடித்திருப்பார். இவரும் ரோஸ் என்ற வெள்ளைக்கார பெண்ணும் காதலித்து வருவார்கள். ஒரு நாள் ரோஸ், கிறிஸ்ஸை தனது வீட்டிற்கு அழைத்து செல்வார். அங்கு ரோஸ்ஸின் பெற்றோர்கள் அவனை கனிவாக பார்த்து கொள்வார்கள். அந்த வீட்டில் இரண்டு கருப்பின இளைஞர்கள் வேலை செய்து கொண்டிருப்பார்கள். இவர்களை எப்போதுமே கிறிஸ் ஒரு வித பதட்டத்துடன் பார்ப்பான்.
 
ஒரு நாள் ரோஸ்ஸின் வீட்டில் பார்ட்டி நடைபெறும். அந்த பார்ட்டியில் கலந்து கொள்ளும் வயதான வெள்ளைக்கார பெண் ஒருவர், கருப்பு நிற இளைஞர் ஒருவரை திருமணம் செய்து இருப்பதை கண்டு அதிர்ச்சியடைவான். பின்னர் அந்த கருப்பு இன இளைஞனை போட்டோ எடுத்து தனது நண்பனிடம் அவனை பற்றி விசாரிக்க சொல்கிறான். அப்போது அவனுக்கு ஒரு திடுக்கிடும் உண்மை ஒன்று தெரிய வருகிறது.
 
அது என்னவென்றால் அந்த கருப்பு இன இளைஞனை அவர்கள் செக்ஸ் அடிமையாக பயன்படுத்தி கொண்டிருக்கும் விஷயம் அவனுக்கு தெரிய வருகிறது. பின்னர் அந்த வீட்டிலிருந்து தனது காதலியை அழைத்து செல்ல முயற்சி செய்வான். அப்போது அவனது காதலி ரோஸ் நிறைய கருப்பு இன இளைஞர்களுடன் நேருக்கமாக இருக்கும் புகைப்படத்தை அவளது அறையில் பார்க்கிறான்.

இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த கிறிஸ் அதன் பின்னர் அந்த வீட்டிலிருந்து அவன் தப்பிக்க முயற்சிக்கும் போது ரோஸ்ஸின் குடும்பத்தினர் அவனை அந்த வீட்டிற்குள் அடைத்து வைக்கிறார்கள். பின்பு கிறிஸ் இவர்களிடம் இருந்து எப்படி தப்பித்தான், அங்கு கருப்பு இன இளைஞர்களுக்கு என்ன நடந்தது என்பது தான் படத்தின் மீதி கதை. இப்படம் சிறந்த படத்திற்காக ஆஸ்கர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டது.  
 
திகில், மர்மம் கலந்த ஜானரில் படம் பார்க்கும் ரசிகர்களுக்கு இப்படம் சிறந்த கையேடு ஆகும். அனைவரும் மறக்காமல் கேட் அவுட் படத்தை பார்த்து விடுங்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்