விஜய்யின் GOAT படத்துக்காக லண்டனுக்கு பறந்த வெங்கட் பிரபு & யுவன்!

vinoth

வியாழன், 25 ஜனவரி 2024 (07:41 IST)
விஜய், தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் The Greatest Of All Time என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவரோடு பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும் மோகன் ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்து வருகிறார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்த படத்தின்  ஷூட்டிங் சென்னை மற்றும் தாய்லாந்து ஆகிய இடங்களில் நடந்தது. தற்போது ஐதராபாத்தில் முக்கியமானக் காட்சிகளை படமாக்கி வருகிறார் இயக்குனர் வெங்கட் பிரபு. இப்போது சென்னை கோவளம் பகுதியில் முக்கியமானக் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.

இப்போது படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வரும் இரண்டு பாடல்களை ரெக்கார்ட் செய்ய இயக்குனர் வெங்கட் பிரபுவும், இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவும் லண்டனுக்கு சென்றுள்ளனர். இதனால் முதல் சிங்கிள் பாடல் விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்