யாதும் ஊரே யாவரும் கேளிர்’ படத்தின் சூப்பர் அப்டேட்!

புதன், 17 மார்ச் 2021 (18:57 IST)
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஒரே நேரத்தில் பல திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில் அந்த திரைப்படங்களில் ஒன்று ’யாதும் ஊரே யாவரும் கேளிர்’ இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது என்பதும் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது தொடங்கி விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ள இந்த படத்தை வெங்கட கிருஷ்ண ரோக்நாத் என்பவர் இயக்கி வருகிறார். இந்த நிலையில் இந்த படத்தின் சூப்பர் அப்டேட் ஒன்று சற்று முன் வெளியாகி உள்ளது 
 
யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தின் சிங்கிள் ட்ராக் மார்ச் 19ஆம் தேதி 6 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நிவாஸ் பிரசன்னா இசையில் உருவாகிய முருகா என்று தொடங்கும் பாடல் தான் ஃபர்ஸ்ட் சிங்கிளாக வெளியாக உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது 
 
வெங்கட கிருஷ்ண கோபிநாத் என்பவர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் விஜய் சேதுபதியின் இன்னொரு வெற்றி படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

#YaadhumOoreYaavarumKelir first single track #Muruga will be releasing on March 19 @ 6:00 PM

A @nivaskprasanna musical@VijaySethuOffl @ChandaraaArts @cineinnovations @roghanth @EssakiduraiS @akash_megha @raguaditya_ @Actor_Vivek @Riythvika @Vetri_DOP @saregamasouth @onlynikil pic.twitter.com/jBKj9CIt0v

— Diamond Babu (@idiamondbabu) March 17, 2021

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்