தளபதின்னு சொல்லாதீங்க விஜய் நியாபகம்தான் வருது – திமுக எம் எல் ஏவுக்கு ஷாக் கொடுத்த பெண்!

சனி, 26 டிசம்பர் 2020 (16:19 IST)
ஸ்டாலினை பற்றி சொல்லும் போது தளபதி ஸ்டாலின் என சொல்லுங்கள் என்று பெண் ஒருவர் கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தமிழ் சினிமாவில் விஜய்யை தளபதி என்றும் தமிழக அரசியலில் திமுக தலைவர் ஸ்டாலினை தளபதி என்றும் அழைத்து வருகின்றனர். அவர்களை பற்றி குறிப்பிடும் போது விஜய் என்றோ ஸ்டாலின் என்றோ அழைக்காமல் தளபதி என்று சொல்வதே மரியாதைக்குரியதாக கருதப்படுகிறது.

இந்நிலையில் திமுகவின் கிராமசபைக் கூட்டத்தை விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே திமுக எம் எல் ஏ தங்கபாண்டியன் தலைமையில் நடந்தது. அப்போது மக்களின் குறையைக் கேட்ட தங்கபாண்டியன் ‘உங்கள் குறைகள் எல்லாம் தளபதி ஆட்சிக்கு வந்ததும் தீர்க்கப்படும்’ எனக் கூறினார். அதைக் கேட்ட பெண் ஒருவர் ‘தளபதி சொல்லாதீங்க… தளபதி ஸ்டாலின்னு சொல்லுங்க… தளபதின்னு சொன்னா விஜய் ஞாபகம்தான் வருது’ எனக் கூறியுள்ளார். இது திமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்