அமீர்கான் படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகியது ஏன்? வெளியான ரகசியம்!

சனி, 23 ஜனவரி 2021 (16:40 IST)
நடிகர் அமீர்கான் நடிக்கும் லால் சிங் லட்டா எனும் படத்தில் நடிக்க ஒப்பந்தமான விஜய் சேதுபதி அந்த படத்தில் இருந்து விலகியுள்ளார்.

1994 ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளியான பாரஸ்ட் கம்ப் படம் ஆஸ்கர்களை அள்ளியது. அதுமட்டுமில்லாமல் இன்று வரை உலக சினிமா ரசிகர்களின் விருப்பப் பட்டியலில் இடம்பெற்றுள்ள படமாக உள்ளது.  இந்த படத்திஅ 25 ஆண்டுகள் கழித்து பாலிவுட் நடிகர் அமீர்கான் லால் சிங் லட்டா எனும் பெயரில் ரீமேக் செய்து வருகிறார். அந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் விஜய் சேதுபதியும் தேர்வானார். ஆனால் அவர் இதுவரை படப்பிடிப்பில் கலந்து கொள்ளவுல்லை. அமீர் கான் நடிக்கும் துபாயில் நடந்து முடிந்தன.

இந்நிலையில் இப்போது இந்த படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகிவிட்டதாக சொல்லப்படுகிறது. தமிழிலேயே நடிக்க முடியாத அளவுக்கு படங்களை வைத்திருக்கும் அவர் அமீர்கான் படத்துக்கு தேதிகள் ஒதுக்க முடியாததால் அதிலிருந்து வெளியேறி விட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் மற்றொரு தகவலாக படத்தில் ராணுவ அதிகாரியாக நடிப்பதற்காக அமீர்கான், விஜய் சேதுபதியின் உடல் எடையை குறைக்க சொன்னதாகவும், அதை விஜய் சேதுபதி செய்யாததால் அவரைப் படத்தில் இருந்து நீக்கியதாகவும் சொல்லப்படுகிறது.

ஆனால் உண்மையானக் காரணம் அது இல்லையாம், படத்தில் தன்னுடைய கதாபாத்திரத்துக்காக 20 நாட்கள் தேதி கொடுத்திருந்தாராம் விஜய் சேதுபதி. அந்த தேதிகளைக் கொடுத்த போது முதலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு படப்பிடிப்பு நடக்கவில்லையாம். பின்னர் 20 நாட்கள் கொடுத்தபோது லடாக் பகுதியில் இந்திய சீனா ராணுவங்களுக்கு இடையே பதற்றமான சூழல் நிலவியதால் மீண்டும் படப்பிடிப்பு நடக்கவில்லையாம். இதனால் தன்னுடைய மற்ற படங்களின் படப்பிடிப்பு பாதிக்கப்பட கூடாது என்பதற்காக தானாகவே விலகிக்கொண்டாராம் விஜய் சேதுபதி.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்