நான் செய்யாத டேட்டிங்கா...? விஷால் ஓபன் டாக்

ஞாயிறு, 11 நவம்பர் 2018 (15:44 IST)
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் மீடூ விவகாரம் பெரிதாக பேசப்பட்டு வந்த நிலையில் திரைத்துறையில் உள்ள பெண்களின் பாதுகாப்பு குறித்து நடிகர் விஷால் பேசியுள்ளார். 
 
விஷால் பேசியது பின்வருமாறு, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என எந்த துறையாக இருந்தாலும், நடிகைகளுக்கு ஏதுவானதாகவும், பாதுகாப்பானதாகவும் இருக்க வேண்டும். 
 
பயத்தினால் பட வாய்ப்பை இழப்பது நிறுத்தப்பட வேண்டும். அதேபோல் வாய்ப்புக்காக பெண்களை பணிய வைப்பது தடுக்கப்பட வேண்டும். என்னுடைய படத்தில் நடிக்கும் பாதுகாப்பை நான் உறுதி செய்தேன். 
 
அதேபோல், மீடூ இயக்கம் சிலரின் தனிப்பட்ட காரணங்களுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது. பழிவாங்குவதற்காக மீடூவை ஆயுதமாக பயன்படுத்தக் கூடாது. 
 
நானும் பெண்களுடன் டேட்டிங் சென்றிருக்கிறேன், அதனால் அவர்களை நான் தவறாக பயன்படுத்தினேன் என்று அர்த்தமில்லை. மனம் ஒத்து பழகுவதற்கும் ஒருவரை தவறாக உபயோகிப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது என தெரிவித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்