பொன்னியின் செல்வன் –ஐ பாலோ பண்ணும் விக்ரம்மின் வீர தீர சூரன் படக்குழு!

vinoth

திங்கள், 22 ஏப்ரல் 2024 (10:58 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விக்ரம்மின் சமீபகாலமாக படங்கள் பெரிய வெற்றியைப் பெறவில்லை. அவர் பா ரஞ்சித் இயக்கத்தில் நடித்துள்ள தங்கலான் படம் விரைவில் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் அந்த படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இதற்கடுத்து விக்ரம், சமீபத்தில் சித்தா என்ற முக்கியமானப் படத்தைக் கொடுத்த இயக்குனர் அருண் குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை மலையாள திரைப்பட தயாரிப்பாளர் சிபு தமீம்ஸ் தயாரிக்கிறார். ஜி வி பிரகாஷ் இசையமைக்க துஷாரா விஜயன், எஸ் ஜே சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். சமீபத்தில் இந்த படத்தின் டைட்டில் டீசர் ரிலீஸாகி கவனம் பெற்றது.

இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாக உள்ளதாம். இதில் முதலில் இரண்டாம் பாகம்தான் ரிலீஸாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இரண்டு பாகங்களுக்கான ஷூட்டிங்கையும் ஒரே நேரத்தில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாம். அதன் பிறகு படங்கள் குறிப்பிட்ட இடைவெளியில் ரிலீஸாகும் என சொல்லப்படுகிறது. சமீபத்தில் பொன்னியின் செல்வன் படத்தை இதுபோல படக்குழு ஒன்றாக படமாக்கி, பின்னர் குறிப்பிட்ட இடைவெளியில் ரிலீஸ் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்