புஷ்பா 2 படத்தோடு மோதுகிறதா விஜய்யின் GOAT திரைப்படம்?

vinoth

சனி, 24 பிப்ரவரி 2024 (08:16 IST)
விஜய், தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் The Greatest Of All Time என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவரோடு பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும் மோகன் ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்து வருகிறார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா ஆகியோர்களின் சகோதரி பவதாரணி மறைவையடுத்து ஷூட்டிங் நிறுத்தப்பட்டது. இப்போது மீண்டும் தொடங்கி சென்னை தாம்பரத்தில் நடந்து வருகிறது.

இந்த படம் முதலில் ஏப்ரலில் ரிலீஸ் ஆகும் என சொல்லப்பட்டது. ஆனால் இப்போது அதற்கான வாய்ப்புகள் இல்லை. அதனால் விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என சொல்லப்பட்டது. ஆனால் இப்போது அந்த தேதியில் இருந்தும் தள்ளிப் போகும் என சொல்லப்படுகிறது. இதனால் ஆகஸ்ட் 15 ஆம் தேதி ரிலீஸ் ஆக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. அதே தேதியில்தான் அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 திரைப்படமும் ரிலீஸ் ஆக வுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்