விஜய்சேதுபதியின் மலையாள திரைப்பட டைட்டில் அறிவிப்பு!

செவ்வாய், 3 நவம்பர் 2020 (20:03 IST)
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஏற்கனவே நடிகர் ஜெயராமுடன் ஒரு மலையாள படத்தில் நடித்துள்ள நிலையில் தற்போது அவர் மேலும் ஒரு மலையாள திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக சமீபத்தில் செய்தி வெளியானது. இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் போஸ்டர் சற்றுமுன் வெளியாகியுள்ளது
 
இந்த படத்தின் ’19 (1)(a)’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இயக்குனர் இந்து இயக்கவுள்ள இந்த படத்தில் விஜய்சேதுபதி, நித்யாமேனன் முக்கிய கேரக்டர்களில் நடிக்கவுள்ளார்கள் என்பதும் இவர்களுடன் இந்திரஜித் சுகுமரன், இந்திரன்ஸ் உள்பட பலர் இந்த படத்தில் இணைந்து நடிக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த படத்தை ஆண்டோ ஜோசப் பிலிம் கம்பெனி என்ற நிறுவனம் தயாரிக்க உள்ளது என்பதும் பிரபல இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா’ இந்த படத்திற்கு இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த படம் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது
 
 

Here it is 19(1)(a) first look poster.#NithyaMenen #IndrajithSukumaran @AJFilmCompany

Written & Directed by #IndhuVS pic.twitter.com/sbTZCxdF3y

— VijaySethupathi (@VijaySethuOffl) November 3, 2020

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்