கஜா புயலால் பாதிக்கப்பட்டோருக்கு உதவிய விஜய் சேதுபதி ! இத்தனை லட்சமா!

திங்கள், 19 நவம்பர் 2018 (16:49 IST)
கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ. 25 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்களை உடனடியாக வழங்குவதாக நடிகர் விஜய் சேதுபதி அறிவித்துள்ளார்.
 
கஜா புயலால் டெல்டா மாவட்ட மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். காலம் காலமாக அவர்கள் சேர்த்து வைத்த சொத்துக்களையும், விவசாய நிலங்களையும்  கஜா புயல் சூறையாடி சென்றுள்ளது. 
 
இதனால் வீடுகளையும் இழந்து குடிக்க தண்ணீர் கூட இல்லாமல் தவித்து வருகின்றனர். இந்த நிலையில் அடுத்தது என்ன செய்வது என்று தெரியாமல் நிர்கதியாக நிற்கும் இவர்களுக்கு தொடர்ந்து உலகம் முழுவதும் இருக்கும் மக்கள் ஆதரவுக் கரம் நீட்ட வேண்டும் என்ற குரல் எழுந்து வருகிறது. 
 
 
இதைத் தொடர்ந்து ரூ. 25 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்களை வழங்குவதாக நடிகர் விஜய் சேதுபதி அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், ''கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முழுவதுமாக மின்சாரம் கிடைக்க பத்து நாட்கள் ஆகும் என்பதால், அவர்களுக்கு உடனடியாக தேவைப்படும் ''சார்ஜிங் டார்ச் லைட்'' ஆயிரக்கணக்கில் வழங்கப்படும். லட்சக்கணக்கான மரங்கள் அழிந்து நாசமாகிவிட்டதால், அதற்கு முன்னுரிமை கொடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் தோப்புகளை முழுவதுமாக புனரமைத்து தரப்படும். 
 
அவர்கள தங்களது பிள்ளைகள் போல வளர்த்து வந்த தென்னை, பலா போன்ற மரங்களின் கன்றுகளை மீண்டும் அவ்விடத்தில் புதிதாக நட்டு வைக்கப்படும். இதற்கான களப்பணிகளில் என்னுடைய ரசிகர்களும் ஈடுபடுவார்கள். நிவாரண நிதி தேவைப்படுபவர்களை ரசிகர் மன்றத்தின் மூலம் கண்டறிந்து அவர்களுக்கு ரசிகர் மன்ற நிர்வாகிகள் மூலம் நிவாரண நிதி வழங்கப்படும்'' என விஜய்சேதுபதி தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்