கண்டபடி பேசிவிட்டு அட்மின் மீது பழி போடுகிறார்கள்: விஜயசேதுபதி பேச்சு

ஞாயிறு, 30 செப்டம்பர் 2018 (14:01 IST)
விஜய் சேதுபதியின் '96' படம் உணர்ச்சி பூர்வமான காதல் படம் . இதில் முதல் முறையாக விஜய்சேதுபதிக்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார்.

 
இப்படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சமீபத்தில் சென்னையில் சந்தித்தனர். இதில் விஜய் சேதுபதி பேசியதாவது : இந்த படம் பிரேமால் தான் ஆரம்பமானது. முதனமுதலில் பிரேம் கதை சொல்ல வந்த போது, இப்படம் எப்படி இருக்கும் என்ற பயம் இருந்தது. இப்போது  முழுமையாக தயாராகி விட்ட 96  படத்தின் மீது் ரசிகர்களுக்கு பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. அதனால் இன்னும் பயம் அதிகமாகிவிட்டது. இந்த பயத்தை போக்கி மகிழ்ச்சியை தரப் போகிறவர்கள் ரசிகர்கள்.  இந்த படத்தின் கதை என்னவென்றால், 96-ல் பிளஸ் டூ முடித்த மாணவர்கள் 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சந்திக்கும் கதை. 96 ஓர் இரவில் படம் நகரும்.
 
என் வீட்டில் நடந்தது வருமான வரி சோதனை கிடையாது. நான் முறையாக வரி செலுத்துபவன். முன்கூட்டியே வரி செலுத்தி உள்ளேன். அது விஷயமாக அதிகாரிகள் வந்தனர், எனது ஆடிட்டரால் வந்த குழப்பம் அது.
 
ஒரு விஷயம் தவறாக சொன்னால் தான் வேகமாக பரவும், நல்லது தான். இதனால் பப்ளிசிட்டி தான் கிடைக்கும். சமீபகாலமாக வெளியில் கண்டபடி பேசிவிட்டு அட்மின் மீது பழி போடுகிறார்கள். அது தான் இப்போது டிரண்ட்டாக உள்ளது. அது மாதிரி தான் அது என் வீடே இல்லை, வீடு போன்று செட் அமைத்து ரெய்டு பண்ணாங்க என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்