விஜய்யின் மாஸ்டர் புதிய சாதனை...ரசிகர்கள் கொண்டாட்டம்!!

செவ்வாய், 12 ஜனவரி 2021 (21:59 IST)
விஜய் ,விஜய் சேதுபதி, நடிப்பில் உருவாகியுள்ள படம் மாஸ்டர். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார்.லோகேஷ் கனகராஜ் இப்படத்தை இயக்கியுள்ளார். இன்று மாலை மாஸ்டர் படத்தின் ஒரு முக்கிய புரோமோ தற்போதுவெளியாகி வைரலாகி வருகிறது.

இந்நிலையில் விஜய் ரசிகர்களுக்கு உற்சாகமூட்டுவது போல் ஒரு நற்செய்தி தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

ஆஸ்திரேலியா நாட்டில் விஜய்யின் மாஸ்டர் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. குறிப்பாக அங்குள்ள திரையரங்குகளில் மாஸ்டர் படம் 220 காட்சிகள் திரையிரப்படுகின்றன. இதுவரை நடிகர் கமல்,அஜித் படத்திற்கு வெளிநாடுகளில் உள்ள திரையரங்குகளில் நல்ல வரவேற்பு இருந்த நிலையில் தற்போது விஜய்யின் மாஸ்டர் புதிய சாதனை படைத்துள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நாளை உலகம் முழுவதும் மாஸ்டர் ரிலீஸாகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்