மாஸ்டர் படத்தில் விஜய் டபுள் ரோல்... கடைத்தெருவுக்கு வந்த கதைக்களம்!

புதன், 29 ஏப்ரல் 2020 (19:30 IST)
விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் மாஸ்டர். சேவியர் பிரிட்டோ தயாரித்திருக்கும் இந்தப் படம் ஏப்ரல் 9 ஆம் தேதி ரிலிஸாக இருந்த நிலையில் தற்போது விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22-ம் தேதியன்று படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.    

கொரோனா ஊரடங்கிலும் எதாவது அப்டேட் கொடுங்கப்பா... என விஜய் ரசிகர்கள் விடாமல் நச்சரித்து வருகின்றனர். இத்தரக்கிடையில் படத்தின் டீசர் அல்லது ட்ரைலருக்காக விஜய் ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கின்றனர். மேலும், இத்திரைப்படம் 5 மொழிகளில் வெளியாக இருப்பதாக ஐனாக்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது.

இந்நிலையில் சற்றுமுன் இதுவரை யாரும் அறிந்திராத, வெளிவராத வெயிட்டான தகவல் ஒன்று கசிந்துள்ளது. ஆம், மாஸ்டர் படத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடத்தில் நடித்துள்ளாராம்.  அதில் ஒன்று வில்லன் வேடம் என தகவல் வெளியாகி வருகிறது. மற்றொன்று நம் அனைவருக்கும் தெரிந்தது தான் கல்லுரி பேராசிரியராக நடித்துள்ளது. ஆனால், இதுகுறித்து படக்குழு தரப்பிடம் இருந்து எந்த தகவலும் வெளியாகவில்லை. இருந்தாலும் திரையரங்கில் ரசிகர்களுக்கு பெரிய சர்ப்ரைஸ் காத்திருப்பது உறுதி.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்