20,30 கோடி சம்பளத்த வாங்கிட்டு நீ இலவசத்த பத்தி பேசலாமா? விஜய்யை தாக்கிய பிரபலம்

திங்கள், 19 நவம்பர் 2018 (10:39 IST)
படத்தில் இலவசம் வேண்டாம் என கூறும் விஜய், முருகதாஸ் படத்திற்கு 20,30 கோடி சம்பளமாக வாங்குகிறார்கள் என எழுத்தாளர் சாரு நிவேதா கடுமையாக சாடியுள்ளார்.
தீபாவளியன்று வெளியான விஜய் நடித்த சர்கார் திரைப்படத்தில் இருந்த சில வசனங்கள் ஆளும் அதிமுகவை விமர்சிக்கும் வகையில் இருந்தது இதைத் தொடர்ந்து அதிமுகவினர் விஜய் ரசிகர்கள் வைத்த சர்கார் படத்தின் பேனரை கிழித்தும், சர்கார் படம் ஓடும் தியேட்டர் உரிமையாளர்களை மிரட்டியும் ரௌடிதனம் பண்ணினர்.
 
மக்களின் உணர்ச்சிகளை தூண்டும் விதமாக ஒருபுறம் படத்தில் வீரவசனம் பேசி ஒரு வாரத்தில் நன்றாக கலெக்‌ஷன் அள்ளிவிட்டனர் படக்குழுவினர். பின்னர் அதிமுகவினரின் மிரட்டலுக்கு அடிபணிந்து படத்திலிருந்த சர்ச்சைக் காட்சிகளை நீக்கிவிட்டனர்.
 
இவர்கள் இருவரும் விளையாடிய இந்த விளையாட்டில் முட்டாளாக்கப்பட்டது மக்களாகிய நாம் தான். படத்தில் இலவசங்கள் வேண்டாம் என்று விஜய் பேசிய வீரவசனத்தைக் கேட்டு பல ஆர்வக் கோளாறுகள் தங்கள் வீட்டிலிருந்த மிக்ஸி, கிரைண்டர் ஆகியவற்றை தூக்கி போட்டு உடைத்தனர்.
இந்நிலையில் இதுகுறித்து பேசிய பிரபல எழுத்தாளர் சாரு நிவேதிதா, நான் இலவசத்தை ஆதரிப்பவன் அல்ல. ஆனால் மிக்ஸி, கிரைண்டர் கூட இல்லாத மக்கள் நம் சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
 
 

























விஜய், முருகதாஸ் போன்ற ஆட்கெளெல்லாம் படத்திற்கு 20,30 கோடிகளை சம்பளமாக பெற்றுக்கொண்டு இலவசம் வேண்டாம் என கூறுகின்றனர். இலவசங்களை தூக்கி குப்பையில் எறிகிறார்கள். முருகதாஸை என்னவென்று திட்டுவது? என தெரியவில்லை. நாட்டுநடப்பை தெரிந்துகொண்டு பின் படத்தில் அரசியல் பேசுங்கள் என சாரு நிவேதிதா காட்டமாக பேசினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்