அஜித்தின் 28 ஆண்டு சினிமா வாழ்க்கை: காமன் டிவிபி வெளியிட்டு கொண்டாடிய ரசிகர்கள்

ஞாயிறு, 26 ஜூலை 2020 (19:48 IST)
அஜித்தின் 28 ஆண்டு சினிமா வாழ்க்கை
தல அஜித் கடந்த 1993-ம் ஆண்டு அமராவதி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். செல்வா இயக்கிய இந்தப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் அஜீத் ஜோடியாக சங்கவி நடித்திருந்தார் பின்னாளில் இவர் விஜய்யுடன் அதிக படங்களில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் அஜீத் திரையுலகிற்கு அறிமுகமாகி 28 ஆண்டுகள் ஆனதை அடுத்து அவரது ரசிகர்கள் காமன் டிபி போஸ்டர் ஒன்றை வெளியிட்டு கொண்டாடி வருகின்றனர். இந்த போஸ்டரை நகைச்சுவை நடிகை வித்யூ ராமன் அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் 
 
இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஹெ.ச்ராஜா இயக்கத்தில் ‘வலிமை’ என்ற திரைப்படத்தில் நடித்து வரும் அஜீத் இந்த படத்தை முடித்தவுடன் ’வரலாறு’ திரைப் படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடிப்பார் என்று கூறப்படுகிறது 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்