என் இதயம் வலிக்கிறது - பீட்டர் பாலை பிரிந்த வனிதா உருக்கம்!

செவ்வாய், 20 அக்டோபர் 2020 (15:19 IST)
தமிழ் சினிமா நடிகையும் பிக்பாஸ் பிரபலமான நடிகை வனிதா விஜயகுமார் பீட்டர் பால் என்பவரை 3 வதாக திருமணம் செய்து கொண்டார். பீட்டர் பாலுக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு பிள்ளை இருப்பதும் தெரியவந்தது. பின்னர் பீட்டர் பால் தனது மனைவியை விவகாரத்து செய்யாமலேயே வனிதாவை திருமணம் செய்துகொண்டது சர்ச்சையானது.

இதுகுறித்து டிஜிட்டல் மற்றும் யுடியூப்களில் விவாதிக்கப்பட்டு ஏகப்பட்ட பஞ்சாயத்து ஆகி போலீஸில் புகார் அளிக்கப்பட்டது என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். இந்நிலையில் சமீபத்தில் தனது பிறந்தநாளைக்கொண்டாட குடும்பத்தினருடன் வனிதா கோவா சென்றார். அங்கு கணவருடன் எடுத்துக்கொண்ட ரொமான்டிக் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டார்.

அப்போது கோவாவில் பீட்டர் பால் நன்றாகக் குடித்துவிட்டு வனிதாவிடன் ரவுசு விட்டுள்ளார் என்று தெரிகிறது. இதனால் கடுப்பான வனிதா பீட்டரை அடித்து அவருடனான தனது திருமண உரைவகை அங்கேயே முறித்துக்கொண்டதாக தகவல் வெளியாகியது. தற்ப்போது வனிதாவே அறிக்கை ஒன்றை வெளியிட்டு அதனை உறுதி செய்துள்ளார்.

அந்த அறிக்கையில், மிகுந்த வேதனையாக  இருக்கிறேன். என் இதயம் கனமாக இருக்கிறது. காதல் மட்டுமே நான் விரும்புவதால் மிகவும் பயப்படுகிறேன் இழக்கப்படுகிறேன். காதலை இழப்பது நான் பழகிக்கொண்ட ஒன்று. அன்பை நம்புவதும், ஏமாற்றம் அடைவதும் மிகுந்த வேதனையான ஒன்று. வாழ்க்கை இன்னும் தொடரவேண்டும். இனி எதுவும் என்னை உடைக்க முடியாதது. கடைசியாக நான் இன்னும் கைவிடவில்லை. என கூறிள்ளார்.

இப்படிக்கு வனிதா அக்காவின் வெறியன்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்