சீக்கிரமே வெளிநாடு செல்லும் வலிமைப் படக்குழு – ஹெச் வினோத் கொடுத்த ஐடியா!

செவ்வாய், 24 நவம்பர் 2020 (16:29 IST)
வலிமை படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் அந்த படப்பிடிப்பின்போது அஜித்துக்கு இலேசான விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

வலிமை படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் அந்த படப்பிடிப்பின்போது அஜித்துக்கு இலேசான விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன . கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் வலிமை படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது; இந்த படப்பிடிப்பில் அஜித் உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர் .

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் படப்பிடிப்பு நடைபெற்றபோது அஜித்துக்கு சிறிய காயம் ஏற்பட்டதாகவும் அதனை அடுத்து அவர் ஒரு சில மணி நேரம் ஓய்வு எடுத்துக் கொண்டு மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொண்டு படப்பிடிப்பை முடித்து கொடுத்ததாகவும் கூறப்படுகிறது 

இந்நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்புகளை ஐரோப்பிய நாடுகளில் நடத்த உள்ளார் ஹெச் வினோத். இதற்காக ஐரோப்பிய நாடுகளில் எந்த நாடுகளில் குறைவாக கொரோனா எண்ணிக்கை உள்ளதோ அந்த நாடுகளைப் பட்டியலிட்டு அங்கே சென்று படப்பிடிப்பு நடத்த உள்ளதாக சொல்லப்படுகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்