ஜெண்டில்மேன் 2 படத்தின் பாடல்கள் பற்றிய அப்டேட்டை வெளியிட்ட வைரமுத்து!

புதன், 19 ஜூலை 2023 (07:54 IST)
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் நடித்து 1993ல் வெளியான திரைப்படம் ஜென்டில்மேன். இது ஷங்கரின் முதல் படமாகும். மதுபாலா, சுபஸ்ரீ, செந்தில், கவுண்டமனி உள்ளிட்ட பலர் நடித்து வெளியான இந்த படம் அப்போதைய காலத்திலேயே பெரும் வெற்றி பெற்றது. புதுமுக இயக்குனர் ஷங்கரை நம்பி அதிக பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக இந்த படத்தைத் தயாரித்தார் தயாரிப்பாளர் கே டி குஞ்சுமோன்.

நீண்டகாலமாக படத்தயாரிப்புகளில் ஈடுபடாத அவர் , தற்போது ஜெண்டில்மேன் படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்க இருப்பதாக கே.டி.குஞ்சுமோன் அறிவித்தார். இதற்காக தற்போது “ஜெண்டில்மேன் ஃபிலிம் இண்டர்நேஷனல்” என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி அதன்  மூலமாக தயாரிக்க உள்ளார்.
இந்த படத்தின் இயக்குனராக கோகுல் பிரசாத் என்பவரும், இசையமைப்பாளராக மரகதமணியும் நாயகியாக நயன்தாரா சக்ரவர்த்தி என்பவரும் அறிவிக்கப்பட்டுளனர்.  இந்நிலையில் இப்போது படத்தின் ஒளிப்பதிவாளராக அஜயன் வின்செண்ட் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தின் பாடல்கள் பற்றி பாடல் ஆசிரியர் வைரமுத்து தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில்
“கொச்சியில் இருக்கிறேன்
ஜென்டில்மேன் 2
படத்திற்குப் பாட்டெழுதுகிறேன்

ஆஸ்கர் விருதுக்குப் பிறகு
கீரவாணி(மரகதமணி)
இசையமைக்கும்
முதல் தமிழ்ப்படம்

அதிகாலைப் பறவைகளாய்ப்
பாடிக்கொண்டிருக்கிறோம்
கோகுல் கிருஷ்ணா இயக்குகிறார்

குஞ்சுமோன் படத்துக்குக்
குறையிருக்குமா பாட்டுக்கு?
விரைவில்…” எனக் கூறி குஞ்சுமோனுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்