விஜய்யுடன் மோதும் இரண்டு பெரிய ஹீரோக்கள்

புதன், 2 ஆகஸ்ட் 2023 (20:51 IST)
விஜய்யின் ‘லியோ’  படத்துடன்  பாலகிருஷ்ணாவின் ‘பகவர்ந்த் கேசரி’ படமும் ரவிதேஜாவின்  நாகேஸ்வரராஜ் படமும்  மோதவுள்ளது.

தமிழ் சினிமாவின்  முன்னணி நடிகர் விஜய். இவர், வாரிசு படத்திற்குப் பின் நடித்து வரும் படம் லியோ.

லோகேஷ் இயக்கி வரும்  இந்த படத்தில் விஜய்யுடன் இணைந்து  அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, மன்சூர் அலிகான், மடோனா செபாஸ்டியன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தை  செவன் ஸ்கீர்ன் ஸ்டுடியோ சார்பாக லலித் இந்த படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார்.

சமீபத்தில், விஜய் குரலில், அனிருத் இசையமைப்பில், லியோ பட முதல் சிங்கில்   ‘’நா ரெடிதான்’’ என்ற பாடல் வெளியாகி வைரலானது. இதையடுத்து, சஞ்சய் தத் பிறந்த நாளையொட்டி கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டது.  

கடந்த 14 ஆம் தேதி இப்படத்தின் முழுப் படப்பிடிப்பும் நிறைவடைந்த  நிலையில்  தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் இப்படம் வரும் அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.
 

உலகம் முழுவதும் இப்படத்திற்குப் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில், வரும் அக்டோபர் 19 ஆம் தேதி தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் பாலகிருஷ்ணாவின் பகவந்த் கேசரி படம் ரிலீஸாகும் என்று படக்குழு அறிவித்தது.

அதேபோல், உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு  தெலுங்கு நடிகர் ரவிதேஜான் நுபுர் சனோன், காயத்ரி பரத்வாஜ், ரேணு தேசாய் ஆகியோர்   நடிப்பில் உருவாகி வரும்  பான் இந்திய படமான ‘’நாகேஸ்வர ராவ்’’ படம் வரும் அக்டோபர் மாதம் 20 ஆம் தேதி ரிலீஸாகும் என படக்குழு அறிவித்துள்ளனர்.
 

இதனால், விஜய்யின் லியோ படத்துடன்  பாலகிருஷ்ணாவின் பகவந்த் கேசரி படமும், ரவிதேஜாவின் நாகேஸ்வரராவ் படமும்  நேரடியாக மோதுகிறது. இதனால் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில்  விஜய் படத்திற்கு குறைவான தியேட்டர்கள் கிடைக்கும் சூழல் ஏற்படும் எனத் தகவல் வெளியாகி

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்