டொராண்டோ தமிழ் இருக்கை தூதரானார் டி.இமான்

வெள்ளி, 19 ஜூன் 2020 (23:20 IST)
தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராக இருப்பவர் டி.இமான். இவருக்கு டொரோனா தமிழ் இருக்கை தூதராக சிறப்பு கௌரவம் வழங்கப்பட்டுள்ளது.

கனடா நாட்டில் சிறப்பு வாய்ந்த பல்கலைக்கழகமான டொராண்டோவில் செம்மொழி தகுதி பெற்ற தமிழ் மொழிக்கு என ஒரு இருக்கை அமைத்து இருக்கிறது.

இந்நிலையில், டொரோண்டா தமிழ் இருக்கையின் தூதராக இசையமைப்பாளர் டி. இமான் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்காக பல பிரபலங்கள் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்