ஷங்கர் ராம்சரண் தேஜா படத்தில் மூன்று வில்லன்கள்… யார் யார் தெரியுமா?

vinoth

புதன், 20 மார்ச் 2024 (14:44 IST)
தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் ராம்சரண். சமீபத்தில் இவர் நடித்து வெளியான RRR திரைப்படம் உலக அளவில் பிரபலமான நிலையில், ராம்சரணின் அடுத்த படமான கேம்சேஞ்சர் படத்தை இயக்குனர் ஷங்கர் இயக்க தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கிறார். இந்த படத்துக்கு இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் கதை எழுதியுள்ளார்.

இந்த படத்தின் ஷூட்டிங் பல மாதங்களாக விட்டு விட்டு நடந்து வருகிறது. இயக்குனர் ஷங்கர் இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங்கிலும் பிஸியாக இருப்பதே இந்த படத்தின் தாமதத்துக்குக் காரணம். இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் மார்ச் 27 ஆம் தேதி ரிலீஸ் ஆக்வுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் மூன்று நடிகர்கள் வில்லன்களாக நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. எஸ் ஜே சூர்யா, ஸ்ரீகாந்த் மற்றும் நவீன் சந்திரா ஆகிய மூவரும் இந்த படத்தின் பிரதான வில்லன்களாக நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்