மாஸ்டர் படம் ரிலீஸ் ஆகாதது மிகப்பெரிய ஏமாற்றம் - லோகேஷ் கனகராஜ் வேதனை

செவ்வாய், 18 ஆகஸ்ட் 2020 (16:50 IST)
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் "மாஸ்டர்' படத்தில் நடித்து வருகிறார். கல்லூரி பேராசிரியராக விஜய் நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக மாளவிகா மோகன் நடித்துள்ளார். இவர்களோடு சாந்தனு பாக்யராஜும் , வில்லனாக விஜய் சேதுபதியும் நடித்துள்ளனர்.

மேலும் ஆன்ட்ரியா, 96 புகழ் கௌரி கிஷன் உள்ளிட்ட சிலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதியே வெளியாகவிருந்த இப்படம், கொரோனா வைரஸ் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் ரிலீஸ் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த படம் பொங்கல் தினத்தின் ஸ்பெஷலாக படத்தை திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ், மாஸ்டர் வெளியாகாததால் படக்குழு ஏமாற்றத்தில் உள்ளது என தெரிவித்துள்ளார்.

இப்படம்  ஏப்ரல் 9 ஆம் தேதி ரிலிசாக வேண்டியது. ஆனால் கொரோனா காலம் என்பதால் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில், மாஸ்டர் அப்டேட்கள் விஜய் ரசிகர்களுக்கு சரியான நேரத்தில் வந்தே தீரும். அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார் லோகேச்ல் கனகராஜ்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்