'உங்கள் அன்பான வாழ்த்தில் அக மகிழ்கிறேன்' -முதல்வருக்கு நன்றி கூறிய கமல்

செவ்வாய், 7 நவம்பர் 2023 (13:01 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும் மக்கள்  நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் இன்று பிறந்த நாள் கொண்டாடுகிறார். அவருக்கு அரசியல் கட்சித்தலைவர்கள், சினிமா பிரபலங்கள்,  ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.

தமிழ் நாட்டு முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று தன் வலைதள பக்கத்தில்,   கலையுலக சாதனைகள் பல படைக்கும் கலைஞானி  மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். நலம் சூழ வாழிய பல்லாண்டு என்று தெரிவித்துள்ளார்.

இதற்கு நடிகர் கமல்ஹாசன் இனிய நண்பரும், தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் செலுத்தும் ஆற்றல்மிகு முதல்வருமான மு.க.ஸ்டாலின் அவர்களே, உங்கள் அன்பான வாழ்த்தில் அகம் மகிழ்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசன் பிறந்த நாளை முன்னிட்டு,  கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணியில் உருவாகி வரும் கமல்234 படத்தில் டைட்டில் மற்றும் இன்ற்றோ வீடியோ   நேற்று வெளியிப்பட்டது. இப்படத்திற்கு  'தக் லைஃப்' என்று பெயரிடப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்