24 ஆண்டுகளுக்குப் பிறகு அஜித் படத்தில் இணைந்த நடிக்கவுள்ள பிரபல நடிகை… செம்ம காம்போவாச்சே!

vinoth

புதன், 24 ஜனவரி 2024 (07:29 IST)
அஜித் இப்போது விடாமுயற்சி படத்தில் நடித்து  வருகிறார். இந்த படத்தின் ஷுட்டிங் அஸர்பைஜானில்  கடந்த சில மாதங்களாக நடந்து வருகிறது.  இந்த திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, மகிழ்திருமேனி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார். இந்தபடத்தின் அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னே வெளியாகி இருந்தாலும் ஷூட்டிங் இப்போதுதான் அஜர்பைஜானில் தொடங்கியுள்ளது.

இந்த படத்தின் ஷூட்டிங் விரைவில் முடிந்து படம் அஜித் பிறந்தநாளை முன்னிட்டு ஏப்ரல் 26 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது. இதையடுத்து அஜித் நடிக்கும் அடுத்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்த படத்தை தெலுங்கின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. சில தினங்களுக்கு முன்னர் பொங்கல் திருநாளை முன்னிட்டு இந்த படத்தின் பூஜை சென்னையில் எளிமையாக நடந்ததாக ஒரு தகவல் இணையத்தில் பரவி வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை தபு நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. அஜித்துடன் ஏற்கனவே தபு 2000 ஆம் ஆண்டு வெளியான கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் திரைப்படத்தில் ஜோடியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த படத்தில் அவர்கள் இருவரின் நடிப்பும் வெகுவாக சிலாகிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்