இந்திக்கு போன அர்ஜுன் ரெட்டி நடிகை! நஷ்டத்தில் தயாரிப்பாளர்!

புதன், 25 டிசம்பர் 2019 (10:35 IST)
நடிகை ஷாலினி பாண்டே நடிக்க ஒப்பந்தமான படத்திலிருந்து திடீரென விலகியதால் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தயாரிப்பாளர் புகார் அளித்துள்ளார்.

அர்ஜுன் ரெட்டி படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை ஷாலினி பாண்டே. இவரை ’அக்னி சிறகுகள்’ என்ற படத்தில் நடிக்க தயாரிப்பாளர் டி.சிவா ஒப்பந்தம் செய்துள்ளார். படப்பிடிப்பு தொடங்கி சில நாட்கள் ஷூட்டிங்கில் நடித்து வந்தவர் திடீரென இந்தி பட வாய்ப்பு கிடைத்ததால் படத்திலிருந்து விலகியுள்ளார். இதனால் தனக்கு ஒரு கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறி தயாரிப்பாளர் டி.சிவா நீதிமன்றத்தில் மோசடி வழக்கு தொடர்ந்துள்ளார்.

இதுகுறித்து தயாரிப்பாளர் டி.சிவா கூறியபோது ”அக்னி சிறகுகள் படத்தில் ஷாலினி பாண்டேவை ஒப்பந்தம் செய்ததற்கு 35 லட்சம் சம்பளம் கேட்டார். நான் ஒப்புக்கொண்டு 15 லட்சம் முன்பணம் கொடுத்தேன். 27 நாட்கள் படப்பிடிப்புக்கு வந்த பிறகு இந்தி பட வாய்ப்பு கிடைத்ததால் போய் விட்டார். அவரை வைத்து படம் பிடித்த காட்சிகளை மீண்டும் அக்‌ஷரா ஹாசனை ஒப்பந்தம் செய்து படம் பிடித்துள்ளோம். இதனால் 1 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்