முருகதாஸுக்கு கைகொடுத்த முன்னணி ஹீரோ – ஆனாலும் வேண்டாம் என சொன்னது ஏன்?

புதன், 25 நவம்பர் 2020 (10:31 IST)
மாஸ்டர் படத்துக்குப் பின்னர் விஜய் நடிக்கும் விஜய் 65 படத்தை இயக்க இருந்த ஏ ஆர் முருகதாஸ் அந்த படத்தில் இருந்து விலகிவிட்டார். இதையடுத்து அவர் சில ஹீரோக்களிடம் கதை சொல்லி அவர்கள் நடிக்க மறுத்துவிட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் அது உண்மையில்லை. ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் கஜினி மற்றும் ஏழாம் அறிவு ஆகிய படங்களில் நடித்த சூர்யா, முருகதாஸை அழைத்து இணைந்து ஒரு படம் பண்ணலாம் எனக் கூறியதாக சொல்லப்படுகிறது.

ஆனால் இப்போது முருகதாஸ் டிஸ்னிக்காக அனிமேஷன் படம் ஒன்றை இயக்கும் முயற்சியில் இருப்பதால் இப்போதைக்கு முடியாது என சொல்லிவிட்டாராம். ஆனால் விரைவிலேயே அவர்கள் இணையும் படம் ஒன்று உருவாகலாம் என சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்