ஏ.ஆர்.ரஹ்மானுக்கு வாழ்த்துகள் தெரிவித்த சூப்பர் ஸ்டார் ரஜினி

வெள்ளி, 16 ஏப்ரல் 2021 (16:22 IST)
ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்  வாழ்த்து தெரிவித்து இப்படத்தின் போஸ்டரை தனது டுவிட்டர் பக்கத்தில் போஸ்ட் செய்துள்ளார். இதனால் ரஹ்மான் ரசிகர்களும் சூப்பர் ஸ்டார் ரசிகர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஏ ஆர் ரஹ்மான் கதை எழுதி இசையமைத்து தயாரித்திள்ள திரைப்படம் 99 சாங்ஸ். விஸ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ள இந்த திரைப்படத்தை ஜியோ ஸ்டுடியோவுடன் இணைந்து தயாரித்துள்ளார் ரஹ்மான். ஏஹான் பட் மற்றும், எடில்சி வர்கஸ் ஆகியோர் இந்த படத்தில் நாயகன், நாயகியாக நடித்துள்ளனர்.14 பாடல்கள் கொண்ட இந்த படத்தின் இசை சில மாதங்களுக்கு முன்னர் வெளியிடப்பட உள்ளது.

அதே போல படம் இந்த மாதத்தில் ரிலீஸாக உள்ளது. இதற்கான ப்ரமோஷன் பணிகளில் ரஹ்மான் இப்போது ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், 99 சாங்ஸ் படத்திற்கு கதாசிரியராகவும், தயாரிப்பாளராகவும் உள்ள ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்  வாழ்த்து தெரிவித்து இப்படத்தின் போஸ்டரை தனது டுவிட்டர் பக்கத்தில் போஸ்ட் செய்துள்ளார்.

 இதற்கு ரஜினிகாந்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் நன்றி தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே 99 சாங்ஸ் பட பாடல்களும் ஹிந்திப் பாடல்களும் டிரெண்டிங் ஆகியுள்ள நிலையில் இவர்கள் இருவரின் டுவிட்டர் பதிவுகளும் ரசிகர்களால் லைக் செய்யப்பட்டு வைரலாகி வருகிறது.

Wishing you the very best always and for the release of your film #99Songs dear @arrahman ji. May god bless you pic.twitter.com/WEWc1uKbSp

— Rajinikanth (@rajinikanth) April 16, 2021

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்