இந்திய அணியைப் புகழ்ந்த சூப்பர் ஸ்டார் !

செவ்வாய், 19 ஜனவரி 2021 (18:26 IST)
தெலுங்கு சினிமா சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு தனது டுவிட்டர் பக்கத்தில் இந்திய அணியை மனதாரப் பாராட்டிப் பதிவிட்டுள்ளார்.

இன்று பிரிஸ்பேனில் நடந்து முடிந்த பரபரப்பான டெஸ்ட் போட்டியில் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியைப் பெற்ற இந்திய அணி பார்டர் கவாஸ்கர் கோப்பையை இரண்டாவது முறையாக வென்றுள்ளது. மேலும் 32 ஆண்டுகளாக பிரிஸ்பென் காபா மைதானத்தில் தோல்வி அடையாத ஆஸ்திரேலியாவை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. இந்த வெற்றிக்கு இந்திய அணியின் இளம் வீரர்களான ரிஷப் பண்ட், சுப்மன் கில்,உள்ளிட்டோர் மிக முக்கியமானக் காரணமாக அமைந்தனர்.

மூன்றாவது மற்றும் நான்காவது டெஸ்ட் போட்டிகளின் நான்காவது இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடி மேட்ச் வின்னராக ஜொலித்தார் ரிஷப் பண்ட்.

இந்நிலையில் ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை  வென்ற இந்திய அணிக்கு முக.ஸ்டாலின்,  முதல்வர் பழனிசாமி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வாழ்த்தி வருகின்றனர்.

தற்போது பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி இந்திய வீரர்களுக்கு 5 கோடி வரை ஊக்கத்தொகை வழங்குவதாக அறிவித்துள்ளார்.

தற்போது பார் – கவாஸ்கர் கோப்பையை வென்ற இந்திய வீரர்களை இந்தியர்கள் கொண்டாடி வருகின்றனர். எனவே டிவிட்டரில்ப் Brisbane Test: India steal a win: Records broken என்ற ஹேஸ்டேக் உருவாக்கி ட்ரெண்டிங் செய்து வருகின்றனர்.
மேலும், டெஸ்ட் போட்டிக்கு ஏற்றவாறு வீரர்களைப் பழக்கிய பயிற்சியாளர் டிராவிட்டுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

இந்நிலையில் தெலுங்கு சினிமா சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு தனது டுவிட்டர் பக்கத்தில் இந்திய அணியை மனதாரப் பாராட்டிப் பதிவிட்டுள்ளார்.

அதில், வரலாறு மீண்டும் உருவாக்கப்பட்டுள்ளது. நமது இந்திய அணியின் வெற்றிக் களிப்பு நீண்ட காலம் பேசப்படும். வ் இந்த வரலாற்று வெற்றி பெற்ற இந்திய அணிக்கு எனது வாழ்த்துகள். நம்பமுடியாத மகிழ்ச்சி மற்றும் பெருமிதம் எனத் தெரிவித்துள்ளார்.

இந்த டுவிட்டர் பதிவுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது.

தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு  தற்போது ’’சர்காரு வாரி பாட்டா’’என்ற  பிரமாண்ட ஆக்சன் படத்தில் நடித்து வருகிறார்.

 இப்படத்திற்கு மிகப்பெரும் எதிர்ப்பார்ப்பு உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

History was made once again!! The Gabba has been conquered... series sealed 2-1!! Still in a daze! Will cherish this day for a long time. Congratulations on the historic win, Team India!! Incredibly happy and proud

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்