மருமகனுக்கு முட்டுக்கட்டை போட்ட மாமனார்

திங்கள், 18 செப்டம்பர் 2017 (17:25 IST)
மருமகன் நடிக்கலாம் என வாங்கிய தெலுங்குப் படத்தில், நடிக்க வேண்டாம் என மாமனார் முட்டுக்கட்டை போட்டுவிட்டாராம்.



 
தெலுங்கில் சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கும் படம் ‘அர்ஜுன் ரெட்டி’. 4 கோடி ரூபாயில் தயாரிக்கப்பட்டு, 40 கோடிக்கும் மேல் வசூலாகியிருக்கிறது. எனவே, இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை வாங்க பலத்த போட்டி நிலவியிருக்கிறது.

கடைசியில் ஜெயித்தவர் ஒல்லி நடிகர். தானே தயாரித்து, நடிக்கலாம் என நினைத்த ஒல்லி நடிகரின் ஆசையில் மண்ணள்ளிப் போட்டிருக்கிறார் அவருடைய மாமனாரான உச்ச நட்சத்திரம். ‘உங்களுக்குனு ஒரு நல்ல பேர் இருக்கு. இதுமாதிரி படத்துல நடிச்சி அதைக் கெடுத்துக்காதீங்க’ என்றாராம். மாமனார் சொன்னதைக் கேட்பாரா மருமகன்?

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்