சன் டிவிக்காக தயாரித்த படத்தை தியேட்டரில் வெளியிட முயற்சி!

புதன், 4 நவம்பர் 2020 (10:30 IST)
சன் தொலைக்காட்சி தங்கள் சேனலில் நேரடியாக ஒளிபரப்ப தயாரித்த படத்தை திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளது.

சசிக்குமார் நடித்த குட்டிப் புலி மற்றும்  கார்த்தி நடித்த கொம்பன் ஆகிய படங்களை இயக்கியவர் முத்தையா, அவர் படங்களில் சாதியக் கருத்துகள் இடம்பெற்று வருவதாக ஒரு குற்றச்சாட்டு அவர் மேல் வைக்கப்படுகிறது. ஆனாலும் தென் மாவட்டங்களில் அவர் படங்கள் நல்ல வெற்றியைப் பெறுகின்றன. இந்நிலையில் சமீபத்தில் அவர் கௌதம் கார்த்தியை வைத்து இயக்கிய தேவராட்டம் திரைப்படம் சர்ச்சைகளை ஏற்படுத்தி வெற்றி பெற்றது.

இந்நிலையில் அவர் இப்போது அவர் நடிகர் விக்ரம் பிரபு நடிக்கும் புதிய படத்தை இயக்கி வருகிறார். அந்த படத்தில் கதாநாயகியாக லட்சுமி மேனன் நடிக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படம் திரையரங்க வெளியீடாக இல்லாமல் சன் நெக்ஸ்ட் தளம் மற்றும் சன் டிவியில் நேரடியாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை பொங்கலுக்கு நேரடியாக வெளியிடலாம் என முடிவு செய்திருந்தது.

ஆனால் இப்போது திரையரங்குகள் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு விட்ட நிலையில் படத்தை கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு திரையரங்குகளில் வெளியிட்டுவிட்டு பொங்கல் அன்று சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப உள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்