ஜோதிகா அண்ணி பேசியதில் என்ன தப்பு? ஆதரவு கொடுத்த பிரபல தயாரிப்பாளர்

வெள்ளி, 24 ஏப்ரல் 2020 (09:29 IST)
மாமன்னர் ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பெரிய கோவில் குறித்து சமீபத்தில் ஒரு திரைப்பட விழாவில் கலந்து கொண்ட நடிகை ஜோதிகா சர்ச்சைக்குரிய வகையில் பேசிவிட்டதாக நெட்டிசன்கள் கடந்த சில நாட்களாக ஜோதிகாவை மட்டுமின்றி சிவகுமார் குடும்பத்தையே வறுத்தெடுத்து வருகின்றனர். இதுகுறித்து ஜோதிகா தரப்பில் இருந்து இன்னும் எந்தவிதமான விளக்கமும் வரவில்லை என்றாலும் ஜோதிகாவுக்கு நெருக்கமான பல திரையுலக பிரபலங்கள் ஜோதிகா எந்த உள்நோக்கத்தோடு பேசவில்லை என்றும் அவர் பேசியது சரிதான் என்றும் கூறி வருகின்றனர்.
 
இந்த நிலையில் ஜோதிகா நடித்த ‘ராட்சசி’ உள்பட பல திரைப்படங்களை தயாரித்த பிரபல தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு இதுகுறித்து தனது டுவிட்டரில் ஒரு கருத்தை டுவிட்டாக பதிவு செய்துள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது:
 
‘ராட்சசி’படத்தில் பேசிய வசனத்தின் பொருளை நேரில் உணர்ந்த ஜோதிகா அண்ணி, அப்படத்திற்காக விருது வழங்கப்பட்ட பொழுது பேசியது அரைகுறை அர்த்தம் கண்டு அநாகரீகமாக சில அன்பர்களால் பிரபலப்படுத்தப்பட்டு வருகிறது. நல்ல கருத்தை நாடறியச் செய்வதே உங்கள் வெறுப்பு அரசியலின் சாதனை. வேறென்ன சொல்ல’ என்று பதிவு செய்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்