தொடங்கியது சூரியின் கருடன் பட பிஸ்னஸ்… வெளிநாட்டு ரிலீஸ் உரிமையைக் கைப்பற்றிய நிறுவனம்!

vinoth

சனி, 16 மார்ச் 2024 (09:10 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக நடித்து வந்த சூரியை வெற்றிமாறன் விடுதலை திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக ஆக்கினார். அந்த படத்தை தமிழ் ரசிகர்கள் ஏற்றுக்கொண்டதை அடுத்து சூரி தொடர்ந்து கதாநாயகனாகவே சில படங்களில் நடித்து வருகிறார்.

விடுதலை 2 மற்றும் கொட்டுக்காளி ஆகிய படங்களை முடித்த சூரி  அடுத்து நடிக்கும் கருடன் படத்தை இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கி முடித்துள்ளார். இந்த படத்துக்குக் கதையை இயக்குனர் வெற்றிமாறன் எழுதியுள்ளார். இந்த படத்தில் சூரியுடன் முக்கிய வேடங்களில் மலையாள நடிகர் உன்னி முகுந்தன் மற்றும் சசிகுமார் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்த நிலைடில் மார்ச் 29 ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது படத்தின் ஒட்டுமொத்த வெளிநாட்டு ரிலீஸ் உரிமையை யுனைடெட் இந்தியா எக்ஸ்போர்ட்டர்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதை சூரி, தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்