பருந்தாகுது ஊர் குருவி..! – ஆஸ்கர் இறுதி பட்டியலை நோக்கி சூரரை போற்று!

வெள்ளி, 26 பிப்ரவரி 2021 (12:40 IST)
அமெரிக்காவில் வழங்கப்படும் ஆஸ்கர் விருதுக்கு சூர்யா நடித்த சூரரை போற்று படம் சிறந்த பட பரிந்துரைகளில் தேர்வாவதற்கான இறுதி கட்டத்தை அடைந்துள்ளது.

அமெரிக்காவில் வழங்கப்படும் அகாடமி விருது எனப்படும் ஆஸ்கர் விருது உலக புகழ்பெற்ற ஒன்று. பலகாலமாக இந்த விருதை பெற இந்திய சினிமா முயற்சி செய்து வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு, சூரரை போற்று உள்ளிட்ட படங்கள் ஆஸ்கர் விழாவுக்கு அனுப்பப்பட்டது.

இந்நிலையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜல்லிக்கட்டு முதல் சுற்றிலேயே வெளியேறிவிட சூர்யா நடித்த சூரரை போற்று திரைப்படம் பரிந்துரை தகுதி பெற தொடர்ந்து முயற்சித்து வருகிறது. இந்நிலையில் பரிந்துரைக்கு முன்னாள் இறுதி செய்யப்பட்ட 366 படங்களின் பட்டியலில் ஒரே ஒரு இந்திய படமாக சூரரை போற்று உள்ளது. இந்த 366 படங்கள் மீதான வாக்கெடுப்பு மார்ச் 5 முதல் 13 வரை நடைபெறும். இதில் அதிக வாக்குகளை பெறும் படங்கள் நேரடியாக பரிந்துரை பட்டியலில் இடம்பெறும்.
நீண்டகாலம் கழித்து இந்திய படம் முக்கியமாக தமிழ் படம் ஆஸ்கர் பரிந்துரைக்கான தகுதி பட்டியலின் இறுதி வரை சென்றுள்ளதற்காக பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்