அமேசான் பிரைமில் ‘சூரரை போற்று’ செய்த சாதனை!

வெள்ளி, 19 பிப்ரவரி 2021 (18:20 IST)
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியான சூரரைப்போற்று திரைப்படம் அமேசான் பிரைமில் புதிய சாதனை செய்துள்ள தகவல் தற்போது வெளிவந்துள்ளது 
 
சூர்யா நடித்த சூரரைப்போற்று திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் திடீரென அமேசான் பிரைமில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது
 
நவம்பர் 12ஆம் தேதி வெளியான இந்தப் படம் மிகப் பெரிய அளவில் வருமானத்தை பெற்றது என்று கூறப்பட்டது. இந்த நிலையில் பிராந்திய மொழி படங்களில் அமேசான் பிரைமில் அதிக அளவு பார்வையாளர்கள் பெற்ற திரைப்படம் சூரரைப்போற்று என்ற தகவலை அமேசான் இந்தியா தெரிவித்துள்ளது
 
இதனை அடுத்து இந்த தகவலை சூர்யா ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். சூரரைப்போற்று திரைப்படம் அமேசான் பிரைம் மட்டுமன்றி சூர்யாவின் 2டி நிறுவனம் மிகப்பெரிய லாபத்தை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்