''யாரோ சொல்லி டுவீட் செய்கிறார் சச்சின்''… சுமந்த் சி. ராமன் விமர்சனம்!

வியாழன், 4 பிப்ரவரி 2021 (16:57 IST)
இந்திய நாட்டு உள்விவகாரத்தில் வெளிநாட்டவர் தலையிட வேண்டாம் நீங்கள் பார்வையாளராக மட்டும் இருங்கள் என சச்சின் டெண்டுல்கர்  நேற்று டுவீட் பதிவிட்ட நிலையில் சுரேஷ் ரெய்னா, பாடகி  லதா மங்கேஸ்கர் உள்ளிட்ட பலரும் இதே கருத்தை வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் சச்சின் யாரோ சொல்லி டுவீட் பதிவிட்டுள்ளதாக பிரபல கிரிக்கெட் விமர்சகர் சுமந்த் சி.ராமன் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் விவசாயிகள் எண்பது நாளுக்கும் மேலான தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அவர்களுக்கான இணையதளத் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது.

அதேபோல்,டெல்லியில் நுழையமுடியாதபடி ஆணித்தடுப்பு தடுப்புச்சுவர்களும் வைக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்க்கட்சி உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் நேற்று சச்சின் டெண்டுல்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் இருகுறித்துப் பதிவிட்டிருந்ததாவது :

இந்தியாவின் தேசிய இறையாண்மையை சமரசம் செய்ய முடியாது. வெளிநாட்டில் வசிப்போர் பார்வையாளர்களாக  மட்டும் இருங்கள் பங்கேற்பாளர்களாக வேண்டாம். இந்தியர்களுக்கு இந்தியாவைப் பற்றித் தெரியும். இந்தியா ஒற்றுமையால் கட்டமைப்பட்டது எனத் தெரிவித்தார். இதே கருத்தைத்தன் சுரேஷ் ரெய்னா, லதா மங்கேஸ்கர் உள்ளிட்டோர் பதிவிட்டுள்ளனர்.

இந்நிலையில் சச்சின் கூறிய கருத்திற்கு சுமந்த் சி.ராமன் விமர்சனம் தெரிவித்துள்ளார்.

அதில், சச்சின் டெண்டுல்கர் தன்னை தவிர வேறு யாருக்காகவும் நின்றதில்லை ; அவர் யாரோ சொல்லித்தான் இந்த டுவீட் பதிவிட்டுள்ளார் என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
மேலும், டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாகவும் எதிராகவும்  மக்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.

How is sovereignty compromised by a tweet drawing attention to a protest? This man has never stood up for anyone but himself. Guess he was given this and told to tweet it. Heroes often have feet of clay. https://t.co/RTE0KG9Pf3

— Sumanth Raman (@sumanthraman) February 3, 2021

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்