கும்பலாக கொளுத்துவோம்.. நாங்க டொம்மு டொம்முனு வெடிப்போம் - கடுப்பான சாந்தனு!

திங்கள், 6 ஏப்ரல் 2020 (11:54 IST)
கொரோனாவுக்கு எதிராக விளகேற்றுதலை தீபாவளி போன்று கொண்டாடிய சென்னை புல்லிங்கோ!

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக  அனைவரும் ஒன்றிணைந்து பிரதமர் மோடி கூறியதை போலவே நேற்று இரவு 9 மணிக்கு துவங்கி 9 நிமிடங்கள் வீட்டில் விளக்கேற்றினர்.

ஆனால், ஒரு சிலர் அகல் விளக்குகளுடன் ஊர்வலமாக சென்றும், பட்டாசுகள் வெடித்தும் தீபாவளி போல் கொண்டாடியது பெரும் விமர்சனத்துக்கு உள்ளானது. அந்தவகையில் நேற்று சென்னையை சேர்ந்த இளைஞர்கள் பாட்டாசு வெடித்ததை நடிகர் சாந்தனு ட்விட்டர் பக்கத்தில் "யாருடா அது கும்பல் கும்பலா பட்டாஸ் வெடிக்குறது? இது என்ன தீபாவளியா? மரியாதை கொடுங்கடா" என பதிவிட்டு கோபமடைந்துள்ளார்.

Yarra gumbal gumbala pattas vedikradhu ? Idhu Enna Diwali ah ?
Show some respect pls

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்