கொரோனா குமார் படத்தின் நாயகன் இவர்தான்… மகிழ்ச்சியில் படக்குழு!

சனி, 16 ஜனவரி 2021 (16:01 IST)
கொரோனா குமார் திரைப்படத்தில் சந்தானம் கதாநாயகனாக நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்த ’இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ஜூங்கா ஆகிய படங்களையும் கார்த்தி நடித்த ’காஷ்மோரா’ படத்தையும் இயக்கியவர் இயக்குனர் கோகுல். இவர் இயக்கவுள்ள அடுத்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அதற்குக் காரணம் அந்த படத்தின் டைட்டில்தான். ’கொரோனா குமார்’. என்று அறிவிக்கப்பட்ட  படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் குறித்த அறிவிப்பு இதுவரை வெளிவரவில்லை விஜய் சேதுபதியே நடிக்க அதிக வாய்ப்புள்ளதாக சொல்லப்பட்டது.

இந்நிலையில் இப்போது அந்த படத்தின் நாயகனாக சந்தானம் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளாராம். ஏனென்றால் இந்த படம் முழுக்கவே நகைச்சுவைக் காட்சிகளை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டு இருப்பதால் சந்தானம் பொறுத்தமாக இருப்பார் என்று இயக்குனர் கோகுல் இந்த முடிவை எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்