சந்தோஷ் சிவனின் சகோதரருக்குக் கொரோனா ! செயற்கை சுவாசக் கருவிகளோடு சிகிச்சை!

திங்கள், 28 டிசம்பர் 2020 (11:44 IST)
ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் சகோதரர் சங்கித் சிவன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இயக்குனராக அறியப்பட்ட சங்கீத் சிவன் இப்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இப்போது செயற்கை சுவாசக் கருவிகள் பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இவர் மோகன்லால் நடித்த யோதா மற்றும் அரவிந்த் சாமி நடித்த டாடி ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இவர் பிரபல ஒளிப்பதிவாளரான சந்தோஷ் சிவனின் சகோதரரும் ஆவார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்