புராணத் திரைப்படத்தில் சமந்தா! பூஜா ஹெக்டா விலகலால் ஒப்பந்தம்!

சனி, 2 ஜனவரி 2021 (14:21 IST)
இயக்குனர் குணசேகர் இயக்கும் புதிய புராணத் திரைப்படத்தில் நடிக்க சமந்தா ஒப்பந்தம் ஆகியுள்ளாராம்.

தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனராக இருப்பவர் குணசேகர். இவர் பல ஹிட் படங்களை இயக்கியுள்ள நிலையில் இப்போது காளிதாசர் எழுதிய புராணத்தில் உள்ள ஷகுந்தலம் எனும் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு ஒரு புராணத் திரைப்படத்தை உருவாக்க உள்ளார். அந்த படத்தில் ஷகுந்தலை கதாபாத்திரத்தில் நடிக்க பூஜா ஹெக்டே ஒப்பந்தமானார்.

ஆனால் இப்போது அந்த படத்தில் இருந்து பூஜா விலகியதை அடுத்து அந்த கதாபாத்திரத்தில் நடிக்க சமந்தா ஒப்பந்தம் ஆகியுள்ளார். சமீபகாலமாக சமூகவலைதளங்களில் இரு நடிகைகளின் ரசிகர்களும் சண்டையிட்டுக் கொண்டு இருக்கும் நிலையில் இப்போது அந்த கதாபாத்திரத்தில் சமந்தா ஒப்பந்தம் ஆகியிருப்பது மேலும் சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்